ஆஸ்திரேலியாவுக்கு அடிபணிந்த கூகுள்.. காரணம் என்ன..?
கூகுள் ஏற்கனவே, News Corp மற்றும் Nine Entertainment ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், ஃபேஸ்புக் தற்போது Seven West என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
அடுத்த மூன்று வருடங்களில் உலகம் முழுவதும் செய்திகளை செய்தி நிறுவனங்களிடம் இருந்து வாங்க தோராயமாக 7,230 கோடி ரூபாய் செலவிடப்போவதாக அந்நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.
முதலில் ஆஸ்திரேலிய அரசை மிரட்டும் வகையில் நடந்துகொண்ட ஃபேஸ்புக் பணிந்துபோக ஆஸ்திரேலிய அரசின் உறுதியான நிலைப்பாடுதான் காரணம். ஆஸ்திரேலிய அரசைப் பகைத்துக்கொண்டால், அந்நாடு பல்வேறு உலகநாடுகளுடன் இணைந்து பல பிரச்னைகளை செய்யலாம், அதனால் தங்கள் நிறுவனத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என உணர்ந்து ஆஸ்திரேலிய அரசின் சட்டத்துக்கு அடங்கிப்போயிருக்கிறது ஃபேஸ்புக்.
ஆஸ்திரேலியாவில் தற்போது ஆரம்பமாகியிருக்கும் இந்நடைமுறை மற்ற நாடுகளிலும் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. பிரான்சும் இதே போன்று டெக் நிறுவனங்கள் தங்கள் தளங்களில் பகிரப்படும் செய்திகளுக்குப் பணம் செலுத்தும் வகையிலான புதிய விதிமுறைகளைக் கொண்டு வர இருக்கின்றன. மேலும், இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் இது குறித்து ஆலோசித்து வருகின்றன.