“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்தது வெட்கப்படும் செயல்..” – கமல்ஹாசன்

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியிருப்பதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது. வேறு எந்தக் கட்சியும், அரசு அமைக்க உரிமை கோராததால், இதுபற்றி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார். அதன் அடிப்படையில், புதுச்சேரி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை பரிந்துரைத்திருந்தது. அதனை ஏற்ற குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மத்திய அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்து புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்திருக்கிறார்கள். ஜனநாயகத்தையே வெட்கப்படவைக்கும் இச்செயலுக்கு, குடியரசு என்ற பெயர் என்ன பொருத்தம்?


— Kamal Haasan (@ikamalhaasan) February 25, 2021

இந்நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்து புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்திருக்கிறார்கள். ஜனநாயகத்தையே வெட்கப்படவைக்கும் இச்செயலுக்கு, குடியரசு என்ற பெயர் என்ன பொருத்தம்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x