கேந்திரிய வித்யாலயா தேர்வுகள் இன்று தொடக்கம்..
3 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு தேர்வுகள் இன்று ஆஃப்லைன் முறையில் தொடங்கியுள்ளன.
கேந்திரிய வித்யாலயா சங்கதன் சார்பில் 3 முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் இன்று (மார்ச் 1) தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெறுகின்றன. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு முறைகளிலும் நடைபெற உள்ளன.
இணைய வசதி இல்லாத அல்லது தொழில்நுட்பச் சிக்கல் உள்ள மாணவர்களுக்கு மட்டும் ஆஃப்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்குப் பெற்றோரின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம். வகுப்பறைகளில் தனிமனித இடைவெளியோடு தேர்வுகள் நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தது.
செய்முறைத் தேர்வுகள் அனைத்தும் ஆஃப்லைன் மூலமாகவே நடக்கும். வாய்ப்பில்லாதபோது ஆன்லைன் மூலமாக நடைபெறும். அனைத்து வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு முடிவுகள் மார்ச் 31-ம் தேதி வெளியாக உள்ளன.
3 முதல் 5-ம் வகுப்புகளுக்கு 1 மணி நேரமும், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 மணி நேரமும் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இணையப் பிரச்சினைகளைத் தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு வகுப்புக்கும் 2 அல்லது 2 வெவ்வேறு கால அட்டவணைகளில் தேர்வுகள் தொடங்கியுள்ளன.
புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.