ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பார்தி போலீசாரால் கைது..?

மத்திய பிரதேச அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து பேசிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பார்தி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

உத்தரபிரதேசத்தில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சோம்நாத் பார்தி. இவர் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியேறியபோது, ஒரு இளைஞர் அவரது முகத்தில் மையை வீசினார்.

இதையடுத்து சோம்நாத் பார்தி, மத்திய பிரதேச அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது அவர், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கூறி சில மணி நேரங்களில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மிரட்டும் தொனியில் பேசிய குற்றத்திற்காகவும், குழுக்களுக்கு இடையே மோதல் உருவாக்கும் வகையில் பேசியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அத்துடன், அவர் மீது மை வீசப்பட்டது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x