குடும்பத்தினரை கொலை செய்து, ஓட்டல் அதிபர் தற்கொலை

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர் அமோல் ஜக்தீப் (வயது 37). இவர் மனைவி மயூரி (வயது 27). இந்த தம்பதிக்கு ஆதித்யா மற்றும் ஆயுஷ் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஓட்டல் தொழில் நடத்தி வந்த அமோல், அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு காரணமாக ஓட்டலை 100 நாட்களாக மூடி வைத்திருந்தார்.

இதனால், தொழில் நஷ்டம் அடைந்தது. மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அமோல் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தனது உறவினர்களுக்கு போன் செய்து கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவர் வீட்டுக்கு வந்த போது மேலும் அதிர்ச்சியடைந்தனர். காரணம் அமோலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x