வீடியோ தரத்தில் யூடியூப் கொண்டு வந்த புது மாற்றம்?

ஊரடங்கு காலத்தில், பகல், இரவு பாராமல், மக்கள் அதிகளவு யூடியூபில் வீடியோக்களை பார்க்கத்துவங்கினர். இதனால், யூடியூப் செர்வர்கள் அதிகளவு லோடாகும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, இந்தியாவில், மொபைல் டேட்டா மூலம் வீடியோ பார்க்கும்போது, 720p and 1080p கொண்ட உயர்தர வீடியோக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மொபைல் பயன்படுத்தி வீடியோ பார்க்கும்போது, 144p, 240p, 360p மற்றும் 480p என்கிற சாதாரண தரத்தில் மட்டுமே வீடியோக்கள் காட்டப்பட்டு வந்தன.
தற்போது, இந்த கட்டுப்பாடு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மொபைல் சாதனத்தை, வைஃபை மூலம் இணைக்கும்போது, இனி உயர்தரத்தில் (720p and 1080p) வீடியோ பார்க்கலாம். அதேசமயம், மொபைல் டேட்டாவிற்கு மாறியவுடன், யூடியூப் வீடியோவும் 480 p தரத்திற்கு மாறி விடும்.