ஆபாசமாக பேட்டியெடுத்த யூடியூப் சேனல்; போலீஸ் அதிரடி நடவடிக்கை

பெண்களிடம் ஆபாசமாக பேசி, பேட்டி எடுத்து அதனை எடிட் செய்து தவறாக யூடுப்பில் பதிவேற்றியதாக சென்னை போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
சென்னை டாக்ஸ் என்ற யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள் 2020 எப்படிப் போனது என்று பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் இளம்பெண்களிடம் பேட்டி எடுத்துள்ளனர்.
அப்போது பெண்களிடம் ஆபாசமாகப் பேசி அதை தவறாக எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.
இது மிகவும் ஆபாசமாக இருந்ததாக பெசன்ட் நகரை சேர்ந்த லெட்சுமி என்ற பெண் அந்த யூடியூப் சேனல் குழுவினர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
இவரது புகாரின் அடிப்படையில் சென்னை டாக்ஸ் யூடியூப் சேனலின் தொகுப்பாளர் அசென் பாட்ஷா, கேமராமேன் அஜய் பாபு மற்றும் சேனல் உரிமையாளர் தினேஷ் குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்களை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.