பரிசோதனைகளுக்கு ஒப்புதல் தருகிறேன்.. சக்சஸ்’னா எனக்குத்தான்… பிரேசிலின் புதிய டெக்னிக்

பிரேசில் நாட்டு சுகாதார அமைச்சகம் செவ்வாய் அன்று ஜான்சன் அண்ட் ஜான்சனின் புதிய கொரோனா வைரஸுக்கு எதிரான பரிசோதனை தடுப்பூசிக்கு இறுதி கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரேசில் பரிசோதனையை தொடங்கும் நான்காவது தடுப்பூசி ஆகும்.
தற்போதைய நிலையில் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி, சீனாவின் சினோவாக் பயோடெக் தடுப்பூசி, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, அமெரிக்காவின் மார்டனா தடுப்பூசி ஆகியவை இறுதி கட்ட சோதனையில் முன்னணியில் இருக்கின்றன. இந்த வரிசையில் அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியும் இணைந்துள்ளது.
அமெரிக்க மருந்து நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. முதல் இரண்டு ஸ்டேஜ் சோதனைகளை முடித்துள்ள அந்நிறுவனம் இறுதிகட்ட பரிசோதனையை தொடங்கி உள்ளது. ஏனெனில் மூன்றாம் கட்டமாக நடத்தப்படும் இறுதிகட்ட பரிசோதனையை மனிதர்களுக்கு பெரிய அளவில் நடத்தும் போது தான் பக்கவிளைவு இருக்கிறதா அல்லது சாதகமான நிலை உள்ளதா என்பதை கண்டுபிடிக்க முடியும். இதனால் தான் அனைத்து தடுப்பூசிகளும் இறுதிகட்ட முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளன.
உலகிலேயே அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் அனைத்து பரிசோதனை தடுப்பூசிக்கு அனுமதி அளித்து வருகிறது. மருந்து வெற்றி என்றால் தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இதை அனுமதிக்கிறது. இதன்படி ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் பிரேசிலில் ஏழு மாநிலங்களில் 7,000 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி பரிசோதிக்கிறது. இந்த நிறுவனம் பிரேசில் உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 60,000 பேருக்கு தனது சோதனையை தடுப்பூசியை பரிசோதித்து வருகிறது.
பிரேசில் நாடு தற்போதைய நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா இணைந்து தயாரித்த தடுப்பூசி, சீன மருந்து நிறுவனமான சினோவாக் பயோடெக் மற்றும் அமெரிக்க நிறுவனமான ஃபைசர் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி,ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி.. ஆகிய தடுப்பூசிகளுக்கும் மூன்று கட்ட சோதனைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.