“டிஆர்பி புள்ளிவிவரத்தில் பிரபலமான ரிபப்ளிக் டிவி முறைகேடு” – மும்பை போலீஸ் குற்றச்சாட்டு

தொலைக்காட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கை தொடர்பான டிஆர்பி புள்ளிவிவரத்தில் பிரபலமான ரிபப்ளிக் டிவி முறைகேடு செய்ததாக மும்பை போலீஸ் தெரிவித்துள்ளது.

டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டதாக ரிபப்ளிக் டிவி உரிமையாளர்களில் ஒருவரான அர்னாப் கோஸ்வாமியிடம் விசாரிக்க உள்ளதாக மும்பை காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங் தெரிவித்துள்ளார். மும்பை காவல் துறையை இழிவுபடுத்தும் வகையில் ரிபப்ளிக் டிவி செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் காவல் ஆணையர் பரம் பீர் சிங் குற்றஞ்சாட்டினார்.

எந்தெந்த டிவிக்களை மக்கள் அதிகம் பார்க்கிறார்கள் என வீடுகளில் BARO METER என்ற கருவி வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வீட்டினருக்கு சில நூறு ரூபாய் பணம் கொடுத்து தங்கள் சேனலை தொடர்ந்து ஓட வைத்து தங்கள் டிஆர்பி புள்ளிகளை உயர்த்திக்கொண்டார்கள் என்பதே ரிபப்ளிக் உள்ளிட்ட சில டிவி நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டாகும்.

இதற்கிடையில் தங்‌கள் மீதான குற்றச்சாட்டை ரிபப்ளிக் டிவி மறுத்துள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண விவகாரத்தில் மும்பை போலீஸ் குறித்து செய்தி வெளியிட்டதற்கு பழி வாங்கும் விதமாக இந்த தவறான குற்றச்சாட்டை கூறுவதாக ரிபப்ளிக் டிவி விளக்கம் அளித்துள்ளது.

புள்ளிவிவரங்களை வெளியிடும் BARC நிறுவனம் ரிபப்ளிக் டிவி தவறு செய்ததாக எதுவும் கூறவில்லை என்றும் அத்தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. தவறான குற்றச்சாட்டை வெளியிட்டதற்காக மும்பை காவல் துறை ஆணையர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் ரிபப்ளிக் தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x