தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!!!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தர்மபுரி,சேலம் கிருஷ்ணகிரி,பெரம்பலூர், நாமக்கல், திருச்சி, கரூர், அரியலூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்.
மேலும் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மீனவர்கள் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.
சென்னையை பொறுத்த வரை சில இடங்களில் வானம் மேக மூட்டாமாகவும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.