2018-19 வருமானவரி தாக்கல்; செப்டம்பர் 30 காலக்கெடு

2018-2019-ஆம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதகு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய நேரடி வாரியிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2018-2019-ஆம் நிதியாண்டுக்கான ஒரிஜினல் மற்றும் திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 31) முடிவடைகிறது. கரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் கணக்கு தாக்கல் செய்வதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளன.
இதனை கருத்தில் கொண்டு, 2018-19-ஆம் ஆநிதியாண்டுக்கான அசல் மற்றும் திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.