சிறுமி பாலியல் கொலை வழக்கு : திமுக முன்னாள் எம்எல்ஏ விடுதலை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாரை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக பெரம்பலூர் திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டதாகக் கூறி, 10 ஆண்டு சிறை தண்டனையை விதித்தது.

கடந்த 2018ம் ஆண்டு விதிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக எம்எல்ஏ தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டதுடன், வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x