தமிழக அரசு வேலைவாய்ப்பு…செப்.18,விண்ணப்பிக்க கடைசி நாள்!!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிஏ துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.80 ஆயிரம் ஊதியம் வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டிடு

பணி : உதவி மேலாளர்

கல்வித் தகுதி : Chartered Accountant (CA) துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 38 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்

அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : மாதம் ரூ. 40,000 முதல் ரூ.80,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://chennaimetrorail.org/job-notifications/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 18.09.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் (அல்லது) தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை dmhr@cmrl.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 18.09.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Chief General Manager (HR) Chennai Metro Rail Limited CMRL Depot, Admin Building, Poonamallee High Road, Koyambedu, Chennai – 600107.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.09.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ. 300 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 50

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.chennaimetrorail.org என்ற லின்குள் செல்லவும்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x