ஒரு ஆண்டுக்கும் மேலாக கழிவறையில் பூட்டி சித்ரவதை செய்யப்பட்ட பெண் மீட்பு!!

ஹரியானாவின் பானிபட் நகரம் ரிஷ்பூர் கிராமத்தில் ஒரு பெண்ணை கடந்த ஒரு வருடமாக கழிவறையில் அவரது கணவன் பூட்டி வைத்துள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும், பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமண தடை அதிகாரி, தனது நிர்வாகிகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தார். கழிவறையை திறந்து அங்கிருந்த பெண்ணை மீட்டார். பின்னர் தலைமுடியை கழுவி புதிய ஆடை அணிவிக்க வைத்தனர்.

இதுகுறித்து பெண்கள் பாதுகாப்பு அதிகாரி கூறுகையில், “அவர் மனதளவில் நிலையற்றவர் என்று கூறப்படுகிறது, அது உண்மையல்ல. அவர் மனதளவில் நிலையற்றவரா இல்லையா என்பதை உங்களால் உறுதிப்படுத்த முடியாது. அவருக்கு உணவு வழங்காமல் அவரை சித்ரவதை செய்துள்ளனர். இதுபற்றி போலீஸ் புகார் அளித்துள்ளோம். நடவடிக்கை எடுப்பார்கள்” என்றார்.

இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், மீட்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட உள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x