அவர மாஸ்டர் ப்ளாஸ்டர்ன்னு சும்மாவா சொன்னாங்க அவர் பேட் கூட சென்சுரி அடிக்குது !!!

1996 ஆம் ஆண்டு வருடம் இலங்கை அணி உலகக்கோப்பையை வென்றது அந்த அணி உலகக்கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணம் “சனத் ஜெயசூர்யா” என்ற அதிரடி ஆட்டக்காரர் அப்போது வரை துவக்க ஆட்டகாரர்கள் நிலைத்து ஆட வேண்டும் என நினைத்து இருந்த கிரிக்கெட் அணியினர் அதிரடி ஆட்டக்காரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர்.

அப்போது பாகிஸ்தான் அணியில் அதிரடியாக நுழைந்தவர்தான் ஷாஹித் அப்ரிடி அந்த சமயத்தில் இலங்கை அணியை துவம்சம் செய்ய வேண்டும் என இருந்த ரசிகர்களுக்கு அந்த இலங்கை அணிக்கு எதிராக தமது இரண்டாவது போட்டியில் 37 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார் நைரோபியில் நடைபெற்ற போட்டியில் 11 சிக்சர்கள் 6 பவுண்டரிகளுடன் மின்னல் வேக சதம் விளாசி தனது 16-வயதிலேயே கிரிக்கெட் ரசிகர்களை புருவத்தைஉயர்த்த வைத்தவர் அப்ரிடி.

அப்ரிடியின் இந்த சாதனையை முறியடிக்க 18 ஆண்டுகள் தேவை பட்டது 2014 ஆம் ஆண்டு நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சனால் தகர்க்கப்பட்டது.

இந்த நிலையில், அப்ரிடி 37- பந்துகளில் சதம் அடித்த போது பயன்படுத்திய பேட், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் மற்றும் கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருடையதானம், இதை அப்ரிடி ஏற்கனவே தனது சுய சரிதை புத்தகத்தில் இதை தெரிவித்திருந்தாலும் கூட பாகிஸ்தான் முன்னாள் அசார் முகம்மது தற்போது இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் “வைரல்” ஆகி வருகிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x