ஊரடங்கால் மூடி கிடக்கும் கால்நடை சந்தைகள்… இறைச்சிக் கடைக்கு செல்லும் நாட்டுரக மாடுகள்… விவசாயிகள் வேதனை!!!

கொரோனா ஊரடங்கின் காரணமாக தமிழகம் எங்கும் பரவலாக மாட்டு சந்தைகள் மூடப்பட்டுள்ளன. வழக்கமாக மாட்டு சந்தைகளில் உழவுக்காக, பால்  கறக்க உள்ளிட்ட இதர தேவைகளுக்காகவும் விவசாயிகள் வாங்கிக்கொள்வர்.

ஆனால் விவசாயிகள் சந்தைகள் இல்லாத தற்போதுள்ள சூழலில் மாடுகளை பெற சிரமப்படுகின்றனர். குறிப்பாக விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை விவசாய தேவைக்காக கால்நடை வளர்பவர்களிடம் சந்தைகளுக்கு சென்று நாடி கொடுப்பதையே விரும்புவர். ஆனால் தற்போது உள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக மாடுகளை விற்பனை செய்ய அவர்கள் சந்தைக்கு செல்ல முடியாததால் இடைத்தரகர்களுக்கு விற்கின்றனர்.

பெரும்பாலும் இவ்வகையான இடைத்தரகர்கள் கூடுதலான பணம் கொடுத்து கால் நடைகளை தங்களின் இறைச்சி வியாபரத்துக்காக கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டின் இறைச்சி விற்பனை நிலையங்களுக்கும் தந்துவிடுகின்றனர்.

குறிப்பாக மீன் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், மாட்டுக்கறிக்கு மவுசு கூடி இருக்கின்றன. இதன் விலையும் எகிறி இருக்கிறது. 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மாட்டுக்கறியின் விலை தற்போது 400 ரூபாய்க்கு விற்கப்படுவதால் கூடுதலான தொகை கொடுத்து விவசாயிகளிடமிருந்து இடைத்தரகர்கள் மாடுகளை வாங்கிச் செல்கின்றனர்.

அவ்வாறு வாங்கிச் செல்ல கூடிய பெரும்பாலான மாடுகள் நாட்டுரக மாடுகளாகவே இருக்கின்றன. இந்த கொரோனா ஊரடங்கின்போது இதுபோன்ற நாட்டு ரக மாடுகள் அறுப்புக்கு சென்று இருப்பதன் காரணமாக எதிர்காலத்தில் நாட்டு ரக மாடுகளை காண முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

காங்கேயம் உள்ளிட்ட நாட்டு ரக மாடுகள் சந்தைகளில் விவசாயிகளிடம் விற்பதும் வாங்குவதும் ஆக இருந்தது. தற்போது இறைச்சி இடை தரகர்களின் கையில் சிக்கி இருக்கின்றன. இதனால் அரிய வகை நாட்டு மாடுகள் அனைத்தும் அறுப்புக்கு செல்கின்றன. எனவே நாட்டு மாடுகளின் அழிவை கருத்தில்கொண்டு சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக இயங்கும் வகையில் சந்தைகளை திறக்க அனுமதி வேண்டும் என கால்நடை வளர்பாளர்கள் விவசாயிகள் மற்றும் கொங்கு கோசாலா போன்ற தரப்பின் சார்பாக கோரிக்கை எழுந்து உள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x