தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…கன மழை பெய்ய வாய்ப்பு…

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததுள்ள காரணத்தால், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அந்த வகையில், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்துவருகிறது. அதேபோல் நீலகிரியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால்.அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதோடு, ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்மேற்கு பருவகாற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிரம் அடைந்துள்ளது.இதன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் வருகிற 10ம் தேதி வரை இந்த பகுதிகளில் கன மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.