கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் படுவதாக தமிழ்நாடு வணிகர் சங்கம் அறிவிப்பு…
கொரோனா காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி, பழச் சந்தையை விரைவில் திறக்க வலியுறுத்தி வரும் 10-ம் தேதி நடக்கவிருந்த முழு கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் படுவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியதாவது:
தமிழகத்தில் வரும் 10ந்தேதி நடக்க இருந்த மார்க்கெட் மூடல், கடையடைப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் கோயம்பேடு மார்க்கெட்டை விரைவில் திறக்க ஏற்பாடு செய்வதாக அரசு உறுதியளித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும்.
மேலும் இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ணஜெயந்தி வர இருப்பதாலும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.தற்போது , வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் அரிசிக்கு கூட கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்த அவர், அரசு அவர்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவாக ஒரு நல்ல முடிவினை அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.