ஆன்லைன் ரம்மியில் பணத்தை பறிகொடுத்த இளம் காவலர் தூக்கிட்டு தற்கொலை!

திருச்சி அருகே ஆன்லைன் ரம்மியில் சேமிப்பு பணம் முழுவதையும் இழந்தவர், கடன் வாங்கி மேலும் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கக் கோரி தமிழகத்தில் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். கோர்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் பலரது பணத்தையும், உயிரையும் பறிக்கும் ஆன்லைன் ரம்மி ஆட்டத்திற்கு தடை விதிக்க கோர்ட் மறுத்துவிட்டது.

ஆரம்பத்தில் சில நூறு ரூபாய்களை இலவசமாக கொடுப்பதால் இந்த ஆட்டத்தை பலரும் ஆட தொடங்குகின்றனர். பின்னர் தங்கள் சொந்த பணத்தை வைத்து ரம்மி ஆடி அதனை இழக்கின்றனர்.

திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் ஆனந்த், (26). ஆண்ட்ராய்டு மொபைல் போனில், ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் ஆர்வமாக இருந்த இவர், சம்பளம் முழுவதையும் செலவு செய்துள்ளார்.மேலும், நண்பர்களிடம் கடன் வாங்கியும் விளையாடி உள்ளார்.

பெரும் தொகையை ரம்மி விளையாட்டில் இழந்த ஆனந்த், மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து வீட்டுக்கு சென்ற அவர், வீட்டில் உள்ளவர்கள்துாங்கிய பின், வீட்டின் பின்பக்கம் உள்ள மாட்டுக் கொட்டகைக்கு சென்று, சேலையில் துாக்கு போட்டு தற்கொலை செய்தார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x