ரவுடியை கொடூரமாக கொன்று தலையை எடுத்துச் சென்ற கும்பல்!

சென்னை அடுத்த கும்மிடிபூண்டியில் மூன்று பேரை வெட்டிக் கொன்ற வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்த ரவுடியை எதிரிகள் கொடூரமாக கொலை செய்து தலையை வெட்டி எடுத்துச் சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே, ஆத்துப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மாதவன் (26). கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே ஆகாஷ் (18), விமல் (22), சதிஷ் (21) ஆகிய மூன்று பேரை வெட்டிக் கொன்றான். அவ்வழக்கில் குண்டர் சட்டம் போடப்பட்டு சிறையில் இருந்தவன், ஜாமினில் வெளியே வந்து கடந்த மே மாதம் கும்மிடிப்பூண்டி அருகே, காராமணிமேடு கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரை கொலை செய்தான்.
அவ்வழக்கிலும் சிறை சென்று கடந்த மாதம் 28ம் தேதி ஜாமினில் வெளியே வந்தவனை நேற்று மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்தனர். பின்னர் அவரது தலையை வெட்டி எடுத்துச் சென்று கடந்த ஆண்டு மாதவனால் மூவர் கொல்லப்பட்டு கிடந்த அதே இடத்தில் வைத்துள்ளனர். உடலை அருகே உள்ள தைல மர தோப்பில் கிடந்துள்ளது. உடலையும், தலையையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மூவர் கொலைக்கு, பழிவாங்கும் நோக்கத்தோடு இந்தக் கொடூர கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.