கொழுந்தியா மீது ஆசைப்பட்டு காதலனால் குத்துப்பட்ட மாமன்!

தனது காதலியின் மீது அவரது அக்காள் கணவர் ஆசைப்பட்டு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் தங்கையின் காதலன் சரமாரியாக குத்தினார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி வீ. டி. பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சாமுண்டீஸ்வரி . இவருக்கும் திருப்பதியைச் சேர்ந்த துரைபாபுவிற்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. குழந்தைகள் இல்லை.

கொரோனா ஊரடங்கால் மாமியார் வீட்டிற்கு வந்து மூன்று மாதமாக டேரா போட்டுள்ளார் துரைபாபு . மனைவியின் 19 வயது தங்கை பார்வதியை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளலாம் என எண்ணியுள்ளார். பார்வதி பக்கத்து ஊரைச் சேர்ந்த பூவரசன் என்பவரை நான்கு ஆண்டுகளாக காதலிக்கிறார். இவ்விஷயம் அறிந்த துரைபாபு பார்வதியையும் அவரது காதலனையும் கொன்று போட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார்.

பூவரசனியிடம் இதனை தெரிவித்து அழுதுள்ளார் பார்வதி. இதில் ஆத்திரமடைந்த பூவரசன் நண்பர்களுடன் சென்று துரைபாபுவை கத்தியால் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். அவரது அலறம் சத்தம் கேட்டு திரண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்

துரைபாபு கொடுத்த புகாரின் அடிப்படையில் பூவரசன் மற்றும் அலெக்ஸ் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x