கொரோனா நோயாளிகளை பாதியிலேயே இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்! சஸ்பென்ட் செய்த மருத்துவமனை!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வந்தாலும்,. இதனை கட்டுப்படுத்த அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருவதால் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. இதனிடையே கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் மீது தொடர்ந்து பல புகார்கள் எழுந்து வருகின்றன.
குறிப்பாக ஆம்புலன்ஸ் டிரைவர்கள், மருத்துவர்கள் போடும் உடைகளை பொது இடங்களில் போட்டு விட்டு செல்வதாகவும் அதனை நாய் உள்ளிட்டவை கவ்விச் செல்வதாகவும், கொரோனா மருத்துவ கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவதாகவும் புகார் எழுந்தன. இவ்வாறு பல புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், புதுக்கோட்டையில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி கண்ணங்குடிக்கு செல்ல வேண்டிய 3 கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகளை ஏற்றிக்கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வேலாயுதம், அவர்களை வேலாயுதம் பாதி வழியிலேயே இறக்கி விட்டுள்ளார். இது தொடர்பாக வேலாயுதம் மீது புகார் கொடுக்கப்பட்டதால் அவரை சஸ்பெண்ட் செய்து மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.