“தனியாக நிற்கச் சொல்லி சார் அவமானப்படுத்தி விட்டார்கள்” ஓபிஎஸ் தரப்பு குமுறல்

தமிழக அரசியலில் ஆளும் கட்சியான அதிமுகவில் யார் தொடர்ந்து பதவியில் இருந்து வருவது என்கின்ற பதவிப் போட்டி தொடங்கிவிட்டது அதில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமியா? அல்லது தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒ.பன்னீர்செல்வமா? என்கிற பதவிப் போட்டி கடந்த இரு வாரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிலும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வீட்டிலும் சீனியர் அமைச்சர்கள் பஞ்சாயத்தில் ஈடுபட்டார்கள். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. அடுத்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை தீர்மானிப்பதில் எடப்பாடி தரப்பு மிகவும் பலமாக எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் என கூறியிருக்கிறது. ஆனால் ஓ பன்னீர்செல்வம் தரப்போ முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை அறிவிக்கக் கூடாது என வலியுறுத்தி உள்ளது.

இதன் பின்னணியில் ஓ பன்னீர்செல்வம் முத்தரப்பு கூறுவது என்னவென்றால், 74 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியில் ஓ பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராக இருக்கும்போது அவரை ஒதுக்கி வைத்துவிட்டு, எடப்பாடி பழனிச்சாமி தன்னை மிகப்பெரிய ஆளுமையாக நடத்தியுள்ளார். விழா நடக்கும்போது துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அந்த இடத்தில் இருந்தபோது தனியாக நிற்கச் சொல்லி சார் அவமானப்படுத்தி விட்டார்கள் என ஓபிஎஸ் தரப்பு வெளிப்படையாகவே கூறியுள்ளது.

மேலும் ஓ பன்னீர் செல்வத்தை அவமரியாதை செய்து உள்ளார் என அவர் சார்பில் குற்றச்சாட்டு எழும்பியுள்ளது. அரசு விழா நடக்கும்போது, முதலமைச்சர் இருக்கிறார் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிற துணை முதலமைச்சர் இருக்கிறார் ஆனால் கட்சிக்குள் இருக்கும் பிரச்சனையை உள்கொண்டு துணை முதலமைச்சராக ஓ பன்னீர்செல்வம் தனியாக நிறுத்தியது மிகவும் கேவலமான ஒரு விஷயம் என ஓ பன்னீர்செல்வம் தரப்பு அந்த நிகழ்விலேயே கூறிவிட்டு வீட்டுக்கு சென்று உள்ளது.

இதன் பிரதிபலிப்புதான் தொடர்ந்து சீனியர் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிலும் ஓ பன்னீர்செல்வம் வீட்டிலும் பேசியுள்ளார்கள். கடைசியாக எதுவாக இருந்தாலும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான் முடிவு எடுக்க முடியும். அதற்கு முன்பு அரசியல் சூழ்நிலை மாறும். எடப்பாடி பழனிச்சாமி பெரிய ஆள் என்றால் ஓ பன்னீர்செல்வம் பெரிய ஆள். ஆகவே இதை பெரிதுபடுத்த வேண்டாம் என கூறியுள்ளது. இதன் தொடர்ச்சியாகத்தான் அதிமுக தலைமை ஒரு அறிக்கை வெளியிட்டது. இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு தென்மாவட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட சிலர் பேசி வந்தாலும், எடப்பாடி பழனிச்சாமி உள்ள கொங்கு மண்டலத்தில் ஓ பன்னீர்செல்வம் சில மாவட்ட செயலாளர்களை கையில் வைத்து பேசி வருவதாக தகவல் உள்ளது. ஆளும் அதிமுகவில் மிகப்பெரிய முரண்பாடு நடந்து வருகிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x