உதயநிதியுடன் கூட்டணி?? கமல்ஹாசன் விளக்கம்..

கூட்டணி தொடர்பாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதியுடன் சந்திப்பு என்று பரவிய தகவல்களுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
மநீம தலைவர் கமல்ஹாசன் சட்டபேரவைத் தேர்தல் பிரசாரத்தின் தொடக்கமாக தற்போது தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
அதேசமயம் தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, மநீம தலைவர் கமல்ஹாசனை சந்தித்துப் பேசியதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் உதயநிதியுடன் சந்திப்பு என்று பரவிய தகவல்களுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், ‘திமுகவோடு கூட்டணி தொடர்பாக உதயநிதியை சந்தித்ததாக வெளியான தகவல் வெறும் யூகம்தான்; யாரையும் ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.