அயோத்திக்கு தற்போது விடுதலை கிடைத்துள்ளது: பிரதமர் மோடி பேச்சு

அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று அயோத்தியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, ராம ஜென்ம பூமியில் 40 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கல்லை அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் உத்திர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்தி பென் படேல், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் மற்றும் ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவிற்கு என்னை அழைத்ததற்கு நன்றி என்றும். உலகம் முழுவதும் ராமர் பக்தி கீதங்கள் இப்போது ஒலிக்கின்றன. குமரி முதல் இமயம் வரை ராமர் நாமம் ஒலிக்கிறது.என்று கூறினார்.

ராமர் கோயில் போராட்டத்தில் இருந்த உறுதி எவராலும் மறக்க முடியாது. பல வருட காத்திருப்பு இன்று முடிவுக்கு வந்துள்ளது. ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதையடுத்து அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது என்றும் சுதந்திரப் போராட்டம் போல் ராமர் கோவிலுக்காகவும் பலர் உயிர் நீத்துள்ளனர். ராமர் கோவிலுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு 120 கோடி மக்கள் சார்பில் நன்றி எனவும் கூறினார்.

ராமரின் வரலாற்றை அழிக்கும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. வெறுப்புணர்வை மறந்து கோடிக்கணக்கானவர்களை இணைக்கும் சக்தி ராமருக்கு உண்டு என மோடி தனது உரையில் தெரிவித்தார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x