முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் JEE, NEET நுழைவுத்தேர்வுகள் நடைபெறும் – அமித் காரே!!!

நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத்தேர்வுகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் நடத்தப்படும் என்றும், அதற்காக புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமித் காரே கூறியுள்ளார்.
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வை அடுத்த மாதம் 13-ம் தேதி நடத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. மேலும், ஜேஇஇ தேர்வை அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் 6-ம் தேதிவரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா நெருக்கடியால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்படும் என்று கல்வித் துறைச் செயலாளர் கூறியுள்ளார். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், அதற்காக புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமித் காரே கூறியுள்ளார்.