காங்கிரஸ் கட்சியினர் 85 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

ஊரடங்கில் ஆர்ப்பாட்டம் செய்த காங்கிரஸ் கட்சியினர் 85 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் வடசென்னை மாவட்ட தலைவர் திரவியம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் வண்ணாரப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஒன்றாக கூடியது, தொற்று பரவ கூடிய வகையில் செயல்பட்டது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ், ஆர்பாட்டத்தில் பங்கேற்ற 80 ஆண்கள், 5 பெண்கள் உட்பட 85 காங்கிரசார் மீது தண்டையார்பேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
ஊரடங்கில் போராடியதாக இதுவரை 3 முறை காங்கிரசார் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.