கோரோநோவா நானா பார்க்கிறேன்!!!ஷிகர் தவான் நம்பிக்கை…

ஐபிஎல் 2020 தொடரில் டெல்லி அணிக்காக விளையாடும் ஷிகர் தவான், கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டாலும் ஆபத்தான வைரஸைக் கடக்க தன்னுடைய உடலில் முழு நம்பிக்கை இருப்பதாகக் கூறியுள்ளார்.
13 ஆவது ஐபிஎல் தொடரில் டெல்லி அணி தன்னுடைய முதல் போட்டியை செப்டம்பர் 20 ஆம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்நிலையில் டெல்லி அணி இந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளதாக ஷிகர் தவான் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள ஷிகர் தவான் அவர், “ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும், பிசிசிஐ மற்றும் அந்தந்த உரிமையாளர்களால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுகிறார்கள்.

நாங்கள் கோவிட் 19 பரிசோதனைக்கு கிட்டத்தட்ட 8-9 முறை சென்றுள்ளோம்.
இதுபோன்ற கடினமான சூழ்நிலையிலும் பிசிசிஐ இந்த தொடரை நடத்துவது பாரட்டத்தக்கத்து. கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டாலும் ஆபத்தான வைரஸைக் கடக்க என்னுடைய உடலில் முழு நம்பிக்கை இருக்கிறது.
டெல்லி அணியில் சமநிலையான வீரர்கள் இருக்கிறார்கள். நாங்கள் கோப்பையை வெல்வோம் என்று உறுதியாக இருக்கிறோம். அதற்கு நாங்கள் ஒன்றிணைந்து அந்த ஆற்றலை உருவாக்குவது முக்கியம்.

கடந்த ஆண்டு ஸ்ரேயாஸ் அய்யர் அணியை சிறப்பாக வழிநடத்தினார். இந்த முறை ரஹானே வந்துவிட்டார், அஸ்வின் வந்துவிட்டார், அவர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள். அவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளப் போகிறார்கள் என்று நான் நம்புகிறேன்.
நாங்கள் அற்புதமாக பேட் செய்கிறோம். எங்களிடம் அஸ்வின், சந்தீப், அமித் மிஸ்ரா மற்றும் அக்ஸர் படேல் உள்ளனர். அவர்களின் அனுபவம் எங்களுக்கு ஒரு பெரிய பலம். ஆனால் போட்டியை வெல்ல முழு அணியும் நன்றாக விளையாட வேண்டும்” என்று அவர் கூறினார்.