“மேலும் தூக்கி எறியுங்கள்” ; பிரசாரத்தின் போது கூடுதலான வெங்காயம் கேட்ட நிதிஷ்குமார்..

பீகாரில் தேர்தல் பேரணியின்போது அம்மாநில முதல்வர் நிதீஷ்குமார் மீது வெங்காயம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

பீகார் மாநிலம், மதுபானி பகுதியில் ஹர்லாகியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பேரணி மேடையில் பேசும்போது பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் மீது வெங்காயம் வீசப்பட்டது, இந்த சம்பவத்தின் வீடியோ ஆன்லைனிலும் வெளிவந்துள்ளது. இதனால் முதலில் அதிர்ச்சியடைந்த முதல்வர் பிறகு சுதாரித்துக்கொண்டு “மேலும் தூக்கி எறியுங்கள்” என்று கூறினார், அதன்பின்னர் அவரது பாதுகாப்புக் காவலர்கள் அவரைக் காப்பாற்ற முயற்சித்தனர்.

பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 28ஆம் தேதி நிறைவுபெற்றது, இரண்டாம் கட்டத்திற்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று வருகிறது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அப்படியான ஒரு பிரசாரத்தின் போதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x