வேளான் சட்டங்களை முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும்! – ஸ்டாலின்

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தடையை தொடங்கியது திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் உண்ணாநிலை போராட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இதில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “மக்களைப்பற்றி கவலைப்படாமல், சுகாதார நிலைப்பற்றி ஆராய்ந்து பார்க்காமல் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு விரோதமான சட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. கார்ப்பரேட் கம்பெனிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது” என்றார்.
வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் தேவையில்லை என்று கூறிய ஸ்டாலின் இந்த சட்டங்களை முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த பட்டினி போராட்டத்தில் முத்தரசன், கனிமொழி, பாரிவேந்தர், ரவிபச்சமுத்து, வைகோ, திருநாவுக்கரசர், வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.