வாட்ஸாப் மூலம் வருமானம்? எச்சரிக்கையாக இருங்கள்..!

கடந்த சில தினங்களாக வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் வியூஸ் மூலம் தினமும் 500 ரூபாய் முதல் வருமானம் சம்பாதிக்கலாம் என செய்திகளும் அதனுடன் ஒரு லிங்க் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.
வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ்கு 30 வியூஸ் இருந்தால் வருமானம் என்பன போன்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். இதில் நம்முடைய வாட்ஸாப்ப் என்னை ரெஜிஸ்டர் செய்தவுடன் ஒரு லிங்க் ஒன்று கொடுக்கப்பட்டு அதனை தங்களது ஸ்டேட்டஸ் – இல் வையுங்கள் 24 மணிநேரத்திற்குள் நாங்கள் உங்களை தொடர்புகொள்வோம் என்று அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும், அவ்வாறு செய்தால் நாங்கள் தங்களுக்கு விளம்பரம் அனுப்புவோம் அதற்கான கட்டணத்தை தங்களது Phonepe, UPI ID இதன் மூலம் தங்களுக்கு பணத்தை அனுப்புவோம் என்று கூறப்பட்டிருக்கும்.
இது போன்ற இணையதங்கள் தங்களது வங்கி கணக்கு, UPI ID, PHONE PE GOOGLE PAY, PAYTM இதுபோன்ற தகவல்களை பெற்று அந்த தகவல்களை Black Market [ Hackers] மூலம் விற்று அதன் மூலம் பணம் சம்பாதிக்கின்றனர்
தங்களது வங்கி கணக்கு விவரங்கள் கொண்டு உங்களது கணக்கில் உள்ள பணத்தை திருடுகின்றனர் மற்றும் தங்களது வாட்ஸாப்ப் கணக்கு Hack செய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
எனவே வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் மூலம் சம்பாதிக்கலாம் என பரவும் செய்தி முற்றிலும் உண்மை அற்றவை இதனை யாரும் நம்பவேண்டாம்.