தன் ஆசைக்கு இணங்காத 13 வயது சிறுமி மீது பெட்ரோல் ஊற்றிய கொடூரன்!!

தெலுங்கானா மாநிலத்தில் தனது ஆசைக்கு சம்மதிக்காத 13 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் கடந்த செப்., 14 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் ஹத்ராசில், பட்டியல் இனத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் ஒரு வீட்டில் பணியாற்றி வந்த சிறுமியிடம், அதே வீட்டில் உள்ள இளைஞர் தவறாக நடந்துகொள்ள முயன்றிருக்கிறார்.
அதற்கு சம்மதிக்காத சிறுமியை இளைஞர் அடித்து துன்புறுத்தியுள்ளான். பின்னர் இளைஞன் அந்தச் சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளான் .
இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இந்தச் சம்பவத்தை இளைஞன் மற்றும் அவரது குடும்பத்தினர் சிறுமியின் வீட்டில் கூறாமல் சமையல் அறையில் தீ பற்றியதாகத் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் நினைவு திரும்பிய சிறுமி தனக்கு நடந்த கொடுமையைக் கூறியுள்ளார். இதையடுத்து இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார் போலீஸார். இந்தச சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.