தலை தீபாவாளிக்கு வருமாறு அழைத்த மனைவி.. கணவர் சொன்ன பதிலால் நடந்த விபரீதம்…

வெளிநாட்டில் இருக்கும் கணவர் தலை தீபாவளிக்கு ஊருக்கு வர மாட்டேன் என கூறியதால் மனமுடைந்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
செம்பனார்கோவில் அருகே வடகரை புலிகண்ட புத்தூரை சேர்ந்தவர் பாபு. இவருடைய மனைவி சங்கீதா (25). இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து பாபு வேலைக்காக மலேசியா சென்று அங்கு ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு சங்கீதா, பாபுவிடம் செல்போன் மூலம் தலை தீபாவளிக்கு ஊருக்கு வருமாறு கூறியுள்ளார்.
அப்போது மலேசியாவில் இருந்து பேசிய பாபு பணி செய்யும் நிறுவனத்தில் தனக்கு விடுமுறை கிடைக்காததால் தலை தீபாவளி கொண்டாட வர இயலாது என கூறியுள்ளார். கணவரின் வார்த்தையை கேட்டு விரக்தி அடைந்த சங்கீதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.