“அனைத்து பெரிய கட்சிகளும் எங்களை தீண்ட தகாதவர்களாகவே நடத்தின!” – அசாதுதீன் ஓவைசி உருக்கம்..

பீஹாரின் பெரிய கட்சிகள் அனைத்தும் எங்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தின என ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார்.
பீஹார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில், 125 தொகுதிகளில் வென்ற தே.ஜ., கூட்டணி அங்கு ஆட்சியை பிடித்தது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியான, மகாகட்பந்தன் கூட்டணிக்கு 110 இடங்கள் கிடைத்தன. இதில் யாரும் எதிர்பாராத விதமாக, தனித்துப்போட்டியிட்ட ஓவைஸியின் கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம்., 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
வெற்றி குறித்து ஓவைஸி கூறியதாவது: அரசியலில் தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும். பீஹாரின் பெரிய கட்சிகள் ஒன்று கூட கூட்டணிக்காக எங்களை அணுகவில்லை. அனைத்து கட்சிகளும் எங்களை தீண்ட தகாதவர்களாகவே நடத்தின. எங்களுக்கு மகிழ்ச்சியான தினமாக அமைந்துள்ளது. பீஹார் மக்கள் எங்களுக்கு ஓட்டளித்து ஆசிர்வதித்துள்ளனர். அவர்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.