தழைத்து, செழித்து வளர்ந்து இருக்கும் தன்னிகரற்ற தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்த நாள் இன்று!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தன்னிகரற்ற இலக்கிய வரலாற்றுடன் நிலைத்து நிற்கும் தமிழ் மொழியை,  மத்திய அரசு செம்மொழியாக அறிவித்த நாள் செப்டம்பர் 17.

செம்மொழி என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும், பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத் தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும், பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும்.

அந்த அடிப்படையில் 2000 ஆம் ஆண்டுக்கும் மேலாக வளமான இலக்கியங்களையும், தொடர்ச்சியையும் கொண்டுள்ள மொழியாக செழித்து வளர்ந்து வந்த தமிழை செப்டம்பர் 17 ஆம் தேதி மத்திய அரசு 2004 ஆம் ஆண்டு செம்மொழியாக அறிவித்தது. அதன் பின்னர் அடுத்த ஆண்டு ஜூன் 23 முதல் 27 வரை கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழ்நாடு அரசு சார்பாக வெகு சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இன்றோடு தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x