பப்ஜிக்கு இறுதி ஊர்வலம் நடத்திய இளைஞர்கள்

இளைஞர்கள், சிறுவர்களுக்கு பிடித்தமான பப்ஜி விளையாட்டுக்கு தடை விழுந்துள்ள நிலையில், அதன் லோகாவை பிரின்ட் செய்து பாடையில் ஏற்றி குறும்புக்கார இளைஞர்கள் இறுதி ஊர்வலம் சென்றுள்ளனர்.

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு தடை விதித்தது. இந்த நிலையில் சமீபத்தில் சீன  நிறுவனம் பங்குதாரராக உள்ள கொரிய வீடியோ கேம் செயலியான பப்ஜிக்கும் தடை விழுந்துள்ளது.

மத்திய அரசின் தடை உத்தரவையடுத்து கூகிள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து பப்ஜி மொபைல் ஆப் அகற்றப்பட்டது. மேலும் ஏற்கனவே டவுன்லோடு செய்திருப்பவர்களும் இனி விளைடாட இயலாத வகையில் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பப்ஜின் பிரான்ட் லோகோவை பிரின்ட் செய்து மாலை அணிவித்த படத்தை பாடையில் ஏற்றி இளைஞர்கள் தோள்களில் சுமந்துகொண்டு இறுதி ஊர்வலம் நடத்திய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பப்ஜி கேமில் வெற்றியடைந்தால் வரும் ‘வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்’ என்ற வாசகத்தை கோஷமிட்டு நகைச்சுவையாக ஊர்வலம் மேற்கொண்டனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x