ரஷ்யாவில் உயிரிழந்த மருத்துவ மாணவர்கள் உடலை விரைந்து கொண்டு வர நடவடிக்கை

ரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மருத்துவ மாணவர்கள் நால்வரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் பழனிசாமி, அவர்கள் உடலை விரைந்து தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.  

ரஷ்யாவின்  ஓல்கொகார்ட் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் தமிழகம் மற்றும் இந்தியாவில் இருந்து சென்று நிறைய மாணவர்கள் மருத்துவம் பயில்கின்றனர். அவர்களில் சென்னையை சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆஷிக், திட்டக்குடியை சேர்ந்த ராமு விக்னேஷ், மற்றும் மனோஜ் ஆனந்த் ஆகியோரும் அடங்குவர்.

இவர்கள் நேற்று முன் தினம் நண்பர்கள் 10 பேருடன் அங்குள்ள வோல்கா நதிக்கரைக்கு சென்று நீரில் இறங்கி விளையாடினர். அப்போது மாணவர் ஒருவர் நீரில் அடித்து செல்வதை பார்த்த ஸ்டீபன், அவரை காப்பாற்ற முயன்றார்.

ஆனால் நீர் சுழலில் சிக்கி ஸ்டீபனும் அடித்துச்செல்லப்பட்டார். அதை கண்ட மேலும் 2 மாணவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் ஸ்டீபன், முகமது ஆஷிக், ராமு விக்னேஷ், மற்றும் மனோஜ் ஆனந்த் ஆகிய 4 பேரும் நதியில் அடித்துச்செல்லப்பட்டனர்.

நீண்ட நேர தேடுதலுக்கு பின் அவர்கள் நால்வரின் உடல்கள் மீட்கப்பட்டன. ஒருவரை காப்பாற்றச் சென்று நால்வர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர், நண்பர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உயிரிழந்த தமிழக மருத்துவ மாணவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். செய்தி அறிந்து மனவேதனை அடைந்ததாக கூறியுள்ள அவர், உயிரிழந்த 4 மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x