‘போறதுக்கு ஆள் இல்ல’ 10 விமானங்கள் ரத்து

சென்னையில் இருந்து, கல்கத்தா, கொச்சி, ராஜமுந்திரி, கடப்பா, கௌஹாத்தி, விஜயவாடா, விசாகப்பட்டினம், மைசூரு, ஐதராபாத், அந்தமான் ஆகிய, 10 நகரங்களுக்கு நேற்று இயக்கப்பட வேண்டிய விமானங்கள், போதிய பயணியர் இல்லாததால் ரத்து செய்யப்பட்டன.

அதே நேரத்தில், திருவனந்தபுரம், மதுரை, திருச்சி, கோவை, துாத்துக்குடி, சேலம், புவனேஸ்வர், பெங்களூரு உள்ளிட்ட, 26 நகரங்களுக்கு, குறைந்த அளவிலான பயணியருடன் விமானங்கள் இயக்கப்பட்டன.

பல்வேறு நகரங்களில் இருந்து, 26 விமானங்கள் சென்னைக்கு வந்தன. பிரிட்டன், ஓமன், வியட்னாம் நாடுகளில் சிக்கித் தவித்த, 446 இந்தியர்கள், மூன்று சிறப்பு விமானங்களில், சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும், சென்னை விமான நிலையத்தில், மருத்துவச் சோதனைகள் நடத்தப்பட்டு, தனிமைப்படுத்துதலுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x