உ.பி.யில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவனைக் காப்பாற்ற மீட்பு பணிகள் தீவிரம்!!

உ.பி.யில் ஆழ்துளை கிணற்றில் 4 வயது சிறுவன் தவறி விழுந்த சம்பவத்தில் மீட்பு பணிகள் நடக்கின்றன.
உபி. மாநிலம் மெஹாபா மாவட்டம் குல்பஹார் என்ற கிராமத்தில் வயல் வெளியில் மூடப்படாமல் திறந்த நிலையில் ஆழ்துளை கிணறு இருந்துள்ளது. அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவன் போர்வெல் கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.
தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சிறுவனை மீட்கும் பணியில் இறங்கியுள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் சிறுவனை உயிருடன் மீட்க போராடி வருகின்றனர். மாவட்ட நிர்வாகமும் சிறுவனை மீட்பது குறித்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.