கேரளாவில் திருநங்கையர்கள், 18 பேர் பிளஸ் 2 மற்றும் 39 பேர் 10ம் வகுப்பில் தேர்ச்சி..

கேரளாவில் 18 திருநங்கையர் பிளஸ் 2 மற்றும் 39 திருநங்கையர் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சமூக ஏற்றத்தாழ்வு, ஏழ்மை மற்றும் குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு, கல்வியை தொடர முடியாமல் போன, திருநங்கையருக்காக, கேரள கல்வியறிவு திட்ட ஆணையம் சார்பில், கல்வி வழங்கும் திட்டத்தை, அம்மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், 39 திருநங்கையர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், 22 திருநங்கையர், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். இதில், 18 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதிகபட்சமாக பத்தினம்திட்டாவில் 8 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற திருநங்கைகளுக்கு, கேரள எழுத்தறிவு இயக்கத்தின் திட்ட இயக்குநர் ஸ்ரீகலா பாராட்டு தெரிவித்தார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x