“புத்திசாலியான வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறாது” – சீன வர்த்தக அமைச்சர் கருத்து!
![](https://thambattam.com/storage/2020/08/unnamed-6.jpg)
சீனாவை விட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்காவின் சில அரசியல்வாதிகள் அமெரிக்கத் தொழில் நிறுவனங்களுக்கு இடைவிடாமல் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இருப்பினும், அமெரிக்க-சீன வர்த்தக ஆணையம் அண்மையில் வெளியிட்ட தரவுகளின்படி, கருத்துக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்ட அமெரிக்க தொழில் நிறுவனங்களில், சீனாவை உலகளவிலான நெடுநோக்குத் திட்டத்திலும் மிகவும் முக்கிய இடமாகவும் அல்லது முதல் ஐந்து பெரிய சந்தைகளில் ஒன்றாகவும் 83 சதவீதம் தொழில் நிறுவனங்கள் கருதுகின்றன என்பது தெரிய வந்துள்ளது.
அதோடு, சீனாவில் இயங்கும் அலுவலுக்கான முதலீட்டை அடுத்த ஒரு ஆண்டுக்கு மாற்றப்போவதில்லை அல்லது குறிப்பிட அளவில் அதிகரிக்க உள்ளதாகவும் 75 சதவீதம் தொழில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சீன வணிகத் துறை அமைச்சர் ட்சோங் ஷான் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்கு பேட்டி அளித்தபோது, பகுத்தறிவு உள்ள வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறாது என்று தெரிவித்தார்.
![](https://thambattam.com/storage/2020/08/unnamed-1-2-300x200.jpg)
மேலும், சீனப் பொருளாதாரத்திற்கு அழுத்தத்தை எதிர்கொள்ளும் திறனும் சீனச் சந்தையின் ஈர்ப்பாற்றலும் அதிகம் உள்ளது என்று அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளவிவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில், சீனாவில் அன்னிய முதலீட்டைப் பயன்படுத்திய தொகை 53565கோடி யுவானாகும். கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட இது 0.5 விழுக்காடு அதிகமாகும். சீனாவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வெளிநாட்டு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 18838.
குறிப்பாக, கொரோனா வைரஸினால் உலகளவில் நாடு கடந்த தொழில் நிறுவனங்களின் முதலீடு கடுமையாக பாதிக்கப்பட்ட நிலைமையில், வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுவது, வணிக விதிகளுக்குப் பொருந்தியதாக இல்லை. சீனாவுக்கான முதலீட்டை அதிகரிப்பது என்பது தான் உரிய தேர்வு ஆகும்.
தொலைநோக்குடன் பார்த்தால், சீனா வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் பன்நோக்க போட்டி திறன் வலுவடைந்து, நாடு கடந்த தொழில் நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்யும் நம்பிக்கையும் அதிகமாக உள்ளது. சீனா இன்னும் உலகளாவிய தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்யும் முக்கிய இடமாக திகழ்கின்றது.