ராகுலின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லாமல் தனிநபர் தாக்குதலில் இறங்கிய ரவிசங்கர் பிரசாத்!

பேஸ்புக், வாட்ஸாப்பை பா.ஜ.க., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழ் புட்டு புட்டு வைத்துள்ளது. இக்குற்றச்சாட்டை எழுப்பிய ராகுலுக்கு அது பற்றி பதிலளிக்காமல் தோற்றுப்போனவர் கூச்சலிடுகிறார் என கீழ்த்தர அரசியலில் இறங்கியுள்ளார் மத்திய ஐ.டி., அமைச்சர்.

இந்தியாவில் போலி செய்திகள், வெறுப்பு பேச்சுகள் 2014-ம் ஆண்டிலிருந்து அதிகரித்துள்ளது. எது போலி செய்தி, எது உண்மை செய்தி என்று ஆராய்ந்து சொல்லும் ஒரு தொழிலே உருவாகியிருக்கிறது என்றால் இந்த அமைப்பு எப்படி இயங்குகிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.

பா.ஜ.க., அமைச்சர்கள், கட்சியின் தேசிய, மாநில, உள்ளூர் தலைவர்களின் வெறுப்பு பேச்சுக்களை பேஸ்புக் நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. நடவடிக்கை எடுப்பதில்லை. அப்படி அவர்களுக்கு எதிராக செயல்பட்டால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படும் என அஞ்சுகிறது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியுள்ளது. இதனை ராகுல் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஐ.டி., அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் இதற்கு பதிலளிக்காமல், பெங்களூரு கலவரத்துக்கு கருத்து சொல்லாதது ஏன்? தோற்றுப்போனவரின் கூச்சல், சொந்த கட்சியிலுள்ளவர்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாதவர் என தனிநபர் தாக்குதலில் இறங்கியுள்ளார். இதனை அவரது டிவிட்டரில் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக கண்டித்துள்ளனர்.  

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x