நடப்பாண்டு மத்திய அரசு விளம்பரத்திற்காக செய்த செலவு ரூ.700 கோடி!!

மத்திய அரசு விளம்பரத்திற்காக நடப்பாண்டு ரூ.700 கோடி செலவிடப்பட்டிருப்பதாக தகவல்அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஜதின் தேசாய் என்பவர் இது குறித்து மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார்.
இது குறித்து அமைச்சகம் கூறி இருப்பதாவது:
மத்திய அரசு நடப்பாண்டில் 2019-2020 விளம்பரத்திற்காக ரூ.713.20 கோடி பிரிண்ட் மற்றும் எலக்ட்ரானிக் ஊடகம் வழியாக விளம்பரத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.1.95கோடி செலவிடப்பட்டுள்ளது.
295.05 கோடி ரூபாய் பிரிண்ட் மீடியா விளம்பரத்திற்கும், 317.05 கோடி ரூபாய் எலக்ட்ரானிக் மீடியா மூலமான விளம்பரத்திற்கும், 101.10 கோடி ரூபாய் அவுட்டோர் விளம்பரத்திற்கும் செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.