தெலங்கானா முதல்வருக்கு திடீர் நெஞ்சுவலி : மருத்துவமனையில் அனுமதி

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் திடீர் உடல் நலக்குறைவின் காரணமாக செகந்திராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் திடீர் நெஞ்செரிச்சல் மற்றும் நெஞ்சுவலி காரணமாக நேற்று பிற்பகல் செகந்திராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார்.
இது குறித்து முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்வுக்கு அவருடைய குடும்ப மருத்துவர் டாக்டர் எம்.வி.ராவ், நுரையீரல் நிபுணர் டாக்டர் நவ்னீத் சாகர் மற்றும் இதயநோய் நிபுணர் டாக்டர் பிரமோத் குமார் ஆகியோர் பரிசோதனைகளை மேற்கொண்டனர், மேலும் அவர் யஷோதா மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ, சி.டி ஸ்கேன் மற்றும் பிற பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்ததாக முதலமைச்சர் அலுவலகம் (சி.எம்.ஓ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.