“பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்?” தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்றம்!!

பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளில் படிக்காமல் நேரடியாக பத்தாம் வகுப்புக்கு தேர்வு எழுத ஹால் டிக்கெட் பெற்றிருந்த தனித்தேர்வர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரி, கோவையை சேர்ந்த எஸ்.பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், 11ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையும், பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையும் ஆகஸ்ட் 24-ம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனி தேர்வர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்காமல் அரசு பாரபட்சம் காட்டுவதாகவும், அதனால் அவர்கள் ஒராண்டை இழக்க நேரிடும்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் தனித்தேர்வர்களின் முடிவுகளை வெளியிடும் வரை, மேல் நிலைப் பள்ளி மாணவர் சேர்க்கையையும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையையும் தள்ளி வைக்க வேண்டும் எனவும், தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மேல்நிலை வகுப்புகளுக்கு வரும் 24ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தனித்தேர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து ஆகஸ்ட் 25-ம் தேதி தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை வரும் 25ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x