பிளாஸ்மா தானம் செய்ய தெற்காசியாவைச் சேர்ந்தவர்களுக்கு அவசர அழைப்பு விடுத்த இங்கிலாந்து!
![](https://thambattam.com/storage/2020/08/0_NEC_SSR_15072020plasma.jpg)
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா தானம் செய்வதற்கு இந்தியா மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்தவர்களுக்கு இங்கிலாந்து அரசு அவசர அழைப்பு விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தடுக்க சர்வதேச நாடுகள் அனைத்தும் பல்வேறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனாவுக்கான தடுப்பு மருத்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களுக்கு ஆய்வு மருந்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய மருந்து வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனா நோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு குணமடைந்தவர்களின் ரத்தத்தில் இருந்து பெறப்படும் பிளாஸ்மா மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை அதிகம் பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு நல்ல பலனை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனாவால் அதிக பாதிக்கப்பட்டுள்ளவர்களை பாதுகாக்க அங்கு கொரோனாவால் குணமடைந்துள்ள இந்தியா மற்றும் தெற்காசிய பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என பிரிட்டன் சுகாதாரத்துறை வேண்டுகொள் விடுத்துள்ளது.
![](https://thambattam.com/storage/2020/08/6099614_041320-ss-plasma-donation-300x169.jpg)
இது குறித்து தெரிவித்துள்ள இங்கிலாந்தின் தேசிய சுகாதார திட்டத்தின் அதிகாரியும் ரத்தவியல் நிபுணருமான ரேகா ஆனந்த், “ஆசிய சமூகத்திலிருந்து பெறப்படும் பிளாஸ்மா மூலம் எங்களுக்கு அருமையான பதில் கிடைத்துள்ளது. கொரோனா ஆசிய சமூகத்தை விட ஐரோப்பிய சமூகங்களை தான் அதிகமாக தாக்குகிறது. இந்த பிளாஸ்மாவை நன்கொடை அளிப்பதன் மூலம் ஒரு உயிர் காப்பாற்ற முடியும். வெள்ளை இன மக்களை காட்டிலும் இந்தியா மற்றும் தெற்காசிய பின்னணியைச் சேர்ந்தவர்களிடம் இருந்து பெறப்படும் பிளாஸ்மாவில் போதுமான அளவு ஆன்டிபாடிகள் இருப்பதை விட இரு மடங்கு அதிகம் உள்ளது.” என தெரிவித்தார்.
இதுவரை ஒரு பிளாஸ்மா நன்கொடையாளர்களில் 7 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆசிய பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் ஓரு வலுவான எண்ணிக்கையில் பிளாஸ்மா நன்கொடை அளித்து வருவதாகவும் என்.எச்.எஸ்.பி.டி தெரிவித்துள்ளது.