ரஷியா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி! அதிபர் புதின் மகளுக்கே சோதனை செய்து சாதனை!!

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யா அதிகாரபூர்வமாக பதிவு செய்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசியை அதிபர் புதின் மக்களுக்கே செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு உலகளவில் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், அதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதிலும் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்ததுள்ளது. மேலும் தடுப்பூசி சோதனையை 38 தன்னார்வலர்களுக்கு செலுத்தி சோதனையும் செய்துள்ளது.
அந்த பரிசோதனை வெற்றி அடைந்ததாக அறிவித்த ரஷ்யா, பிறகு இரண்டாம் கட்ட சோதனையும் வெற்றி அடைந்ததாக அறிவித்தது. இதை தொடர்ந்து இந்த தடுப்பு மருந்தை பதிவு செய்ய போவதாக ஆகஸ்ட் 10ம் தேதி ஊடகங்களிடம் அந்நாட்டு சுகாதார இணையமைச்சர் ஒலெக் கிரிட்னேவ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்ய அதிபர் புதின் பதிவு செய்து தகவலை ரஷ்ய அமைச்சர்களுக்கு காணொலி வாயிலாக அறிவித்துள்ளார். மேலும் இந்த தடுப்பூசியை முதலில் தனது மகளுக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டதாகவும், அவர் தற்போது நலமுடன் உள்ளார் என்றும் தெரிவித்தார்.
செப்டம்பர் மாதம் முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும் என்றும், கூடிய விரைவில் வெளிநாடுகளுக்கும் அவை ஏற்றுமதி செய்யப்படும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.