வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க டிச., 31 வரை காலவகாசம்

காலாவதியான வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் புதுப்பிக்கும் காலவகாசத்தை செப்., 30-லிருந்து டிச., 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு பிறகு காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை மத்திய அரசு நீட்டித்து வருகிறது.
ஏற்கனவே மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் இக்காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இன்னமும் கொரோனா பெருந்தொற்று சூழல் முழுமையாக நீங்காததால், இதை கருத்தில் கொண்டு மூன்றாவது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.