சசிகலாவுக்கு கார் வழங்கிய, அ.தி.மு.க., நிர்வாகி உட்பட ஏழு பேர் பொறுப்பில் இருந்து நீக்கம்..

சசிகலாவுக்கு கார் வழங்கிய, அ.தி.மு.க., நிர்வாகி உட்பட ஏழு பேர், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டனர்.
கர்நாடகாவில் இருந்து சசிகலா, நேற்று ( பிப்.08) தமிழகம் வந்தார். அவரின் காரில், அ.தி.மு.க., கொடி கட்ட போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலர் சம்பங்கியின் காரில், சசிகலா பயணம் செய்தார். அந்த காரில், அ.தி.மு.க., கொடி கட்டப்பட்டிருந்தது.

அதை தொடர்ந்து, சசிகலாவுக்கு வரவேற்பு அளித்த, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணை செயலர் தட்சணாமூர்த்தி; கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்,சூளகிரி கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த, ஒன்றிய எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலர்சம்பங்கி; ஒன்றிய விவசாய பிரிவு செயலர் சந்திரசேகரரெட்டி. ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ஜானகிரவீந்திரரெட்டி; கொம்மேப்பள்ளி ஊராட்சி தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர் பிரசாந்த்குமார்; ஒன்றிய இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை தலைவர் நாகராஜ்.சூளகிரி மேற்கு ஒன்றியம், சங்கிரிப்பள்ளி ஆனந்த் ஆகியோர், அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான அறிவிப்பை, கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் அறிவித்துள்ளனர்.