“செப்டம்பர் 1-ந்தேதி முதல் ரெயில்கள், பஸ்கள், போன்ற போக்குவரத்துகள் இயக்கப்பட வேண்டும்” – வைகோ கோரிக்கை

கொரோனா தொற்று அச்சம் காரணமாக, கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு நடைமுறையில் இருக்கின்றது. மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்தை நிறுத்தப்பட்டு, இ-பாஸ் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டை விட மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட டெல்லியில், ஒரு மாதத்துக்கு முன்பே அனைத்துத் தடைகளும் விலக்கப்பட்டு விட்டன. இப்போது அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டது.
எனவே, அனைத்துத் தரப்பு மக்களின் நலன் கருதி, தமிழகத்தில் போக்குவரத்து முடக்கத்தை நீக்க வேண்டும். அரசு பஸ்களை கட்டுப்பாடுகளுடன் இயக்க வேண்டும். செப்டம்பர் 1-ந்தேதி முதல் ரெயில்கள் ஓடுவதற்கும் ஆவண செய்ய வேண்டும். வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் வருவதற்கும் வகை செய்ய வேண்டும். அதேவேளை சமூக விலகலைக் கடைபிடித்து பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.